ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிகள் சட்டமுன்வரைவு, 2020

By- Vinudeep

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதியில் அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கும்
மொழிகள் மற்றும் அத்துடன் இணைந்த அதை ஒட்டிய பொருண்மைகளுக்கான ஒரு சட்டம்
இந்திய குடியரசின் எழுபத்தொன்றாம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தால் இயற்றபட்டது

யாதென்றால் –

 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இச்சட்டம் ஜம்மு காஷ்மீர்
  அலுவல் மொழிகள் சட்டம், 2020 என்றழைக்கபடும்.
  (2) இது ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதியை அளாவி நிற்கும்.
  (3) இச்சட்டம், மத்திய அரசு அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடும் அறிவிக்கையில்
  குறிக்கப்பட்ட நாளில் செயல்பாட்டுக்கு வரும்.
  வரம்புரையாக, நிர்வாக ஆட்சியாளர் இச்சட்டம் செயல்பாட்டுக்கு வரும் நாளை மாற்றி
  அமைக்கலாம்.
 2. வரையரைகள்.- இந்த சட்டத்தில், தறுவாயின் தேவை வேறானாலன்றி, –
  (அ) “நிர்வாக ஆட்சியாளர்” என்பவர் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்புச் சட்டம்
  உருபு 239-ன் கீழ் நியமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான துணை நிலை ஆளுநரைக்
  குறிக்கும்;
  (ஆ) “ஒன்றிய பகுதி” என்பது ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதியை குறிக்கும்.
 3. ஒன்றிய பகுதிக்கான அலுவல் மொழிகள்.- நிர்வாக ஆட்சியாளர் இதற்காக
  அதிகாரபூர்வ அரசிதழில் குறிக்கும் நாள் முதல் ஒன்றிய பகுதியின் ஏதாவது அல்லது
  அனைத்து அலுவல் பணிகளுக்காக காஷ்மீரி, டோக்ரி, உருது, ஹிந்தி, மற்றும்
  ஆங்கில மொழிகள் பயன்படுத்தபடும்.
  வரம்புரையாக: இச்சட்டம் செயல்முறைக்கு வருவதற்கு முன்பாக நிர்வாக மற்றும்
  சட்டமியற்றலுக்காக எங்கெல்லாம் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டதோ அங்கு
  ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்தப்படும்

மேலும் வரம்புரையாக ஒன்றிய பகுதியின் சட்டமன்றத்தின் அலுவல்கள் ஒன்றிய
பகுதியின் அலுவல் மொழியிலோ மொழிகளிலோ மேற்கொள்ளப்படும்.

 1. பிராந்திய மொழிகளின் வளர்ச்சியும் ஊக்கமும்.- (1) பிராந்திய மொழிகளின்
  வளர்ச்சிக்காக நிர்வாக ஆட்சியாளர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளின்
  குழுமங்களை பலப்படுத்துதல் போன்ற அமைப்புசார் நடவடிக்கைகளை
  மேற்கொள்ளலாம்.
  (2) உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புசார் நடவடிக்கைகளில் கொஜ்ரி,
  பஹரி மற்றும் பஞ்சாபி மொழிகளின் வளர்ச்சி மற்றும் உக்கத்திற்கும் சிறப்பு
  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply